Monday, January 7, 2008

"எவனோ ஒருவன்" - ஒழிக்கப்படவேண்டியவன்

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த நடுத்தர பார்ப்பன குடும்பத்தை சேர்ந்தவன் ஸ்ரீதர் வாசுதேவன் (மாதவன்). அவனூடன் மனைவி (சங்கீதா) மற்றும் ஒரு குழந்தை. இதில் சின்ன சின்ன பிரச்சினையில் மாதவன் கேள்வி கேட்கிறார். திடீரென இரு நாட்கள் மட்டும் சமூகத்தை மாற்றுவதற்காக ஆயுதம் ஏந்துகிறார். பிறகு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வாசுதேவனை மனதால் வாசுதேவனின் தாசனாகவும் உடலால் காவல் ஏவலனாகவும் வேலைப்பார்க்கும் வெற்றிமாறன் (சீமான்) சுட்டுகொல்கிறார். புளித்துப்போன கதை என்றாலும், வெளியிடப்பட்ட விளம்பரங்களாலும், பத்திரிக்கைகளின் ஊகத்தாலும், மானமிகு சீமானின் பங்களிப்பாலும், ஏகத்துக்கும் வீங்கிப் போயிருக்கிறது படத்தின் மதிப்பு.

"இந்த சமூகத்தின் உயர்நிலைப் பிரிவான பார்ப்பன சமூகம் அதில் அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறது. மிகப்பொதுமையாக அனைத்தையும் எதிர்கொள்கிறது. தவிர்க்க முடியாத பிரச்சினைகளில் ஆயுதம் ஏந்துகிறது. அது சரியாகவே இருக்கும், இருக்க வேண்டும். அந்த பார்ப்பனனை ஆயுதம் ஏந்தவைத்தது இச்சமூகமே. அதனை திருத்துவதற்காகவே அவன் ஆயுதம் ஏந்துகிறான். அதை இந்த சமூகம் அங்கீகரிக்க வேண்டும்" இது போன்ற பார்ப்பன கழிவுகளை மீண்டும் எடுத்து மறுசுழற்சி செய்து அதன் மணம் மற்றும் சுவை மாறாமல் தந்திருக்கிறார், பார்ப்பனீயத்தின் தாசனாகிய மாண்புமிகு சீமான். அதற்காக, சமூக ரீதியான பிரச்சினைகளை தனிப்பட்ட மனிதனுடைய பிரச்சினைகளாக மாற்றி போலியான தீர்வுகளை திரைப்படம் முழுவதும் கூறப்பட்டுள்ளது.

மேடைக்கு மேடை (பெரியார் தி.க மேடையில்) "டேய் பார்ப்பானுங்களா! ஆர்.எஸ்.எஸ் காரனுங்களா! எங்க ஊர் பக்கம் (பரமக்குடி) வாங்கடா - வெட்டுறேன்." என ஆசன வாய் கிழிய பேசும் சீமான், பார்ப்பனனின் ஆசைக் கிணங்க, பார்ப்பனனின் வரலாற்றை வசன மேற்பார்வை பார்த்த சீமானுக்காக பெரியார் தி.க.வினர் வக்காலத்து வாங்குவார்களோ?. 'தம்பியை' பெரியாருக்கு அர்ப்பணம் செய்த சீமான், இப்படத்தை இந்த நாட்டுக்காகவே வாழ்ந்து, உழைக்கும் மக்களுக்காக அன்றாடம் கண்ணீர் மல்க ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யும் அம்பிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ் -ன் பிரச்சாரப்படம் என்ற முறையில் சாவர்க்கருக்கும் அர்ப்பணம் செய்திருக்கிறார். அவரின் பெரியார் சிந்தனை பொதிந்த, ஈழப்பார்வை கனிந்த, 'சே'வின் கொள்கையுடைய படத்தின் எழுத்துக்களை சற்று அலசுவோம்.
.....
காலையில் மணி அடிக்கிறது, மனைவியின் சமையல், குளியல், ரயில் நிலையம், அலுவலகம், சாப்பாடு, மீண்டும் வேலை, ரயில், குழந்தையிடம் கொஞ்சல் "நன்னா கடிச்சு சாப்பாடு" என்ற பார்ப்பன மொழியோடு தொடர்கிறது திரைப்படம். இந்த இயல்பு வாழ்க்கையையே 2.30 மணி நேரம் காட்டினால் சலிப்பு ஏற்படும் என்பதால் இயல்பான அந்த பார்ப்பனன் ஆயுதம் ஏந்தப்படுகிறான்.

..
ஸ்கூலில் கல்வி கத்து கொடுப்பதுதான் வாத்தியார் வேலை எதுக்கு டியூசன்? என்று கேள்வி கேட்பவனால் அரசு பள்ளிகளை செயல்படா நிலைக்கு கொண்டு சென்றது குறித்து வருத்தம் இல்லை. தெருவில் இறங்கி தண்ணீர் பிடிக்கப்போகிறான். லஞ்சம் கேட்கும் பணியாளிடம் நான் மரியாதையா வாங்கோ போங்கோன்னு பேசறேன். நீங்களும் மரியாதையா பேசுங்க என சட்டத்திற்கு உட்பட்டு லஞ்சத்தின் மீது கோபம் கொள்கிறான். பேங்க-ல லோனுக்காக மலையாளியிடம் அட்ஜஸ்ட் செய்ய மறுக்கிறான். "எனக்கி கிடைக்கிற சம்பளத்தில் எப்படி வாழறதுன்னு எனக்குத் தெரியும். உங்க காசு பெருமை யெல்லாம் என்கிட்ட காட்டாதேள்" என வெடிக்கிறான். ஓயாமல் இருமும் ஏழைச்சிறுவனுக்கு பணம் கொடுத்து உதவுகிறான். தன்னுடைய உடலுறவுத்தேவைக்காக மனைவியை எழுப்புகிறான். அவள் என்ன, என்ன ? நாளைக்கு இண்டர்வூ போகனும் ஞாபகம் இருக்குல்ல என்கிறாள். அவனுடைய கவலை (உடற்தேவை) சமூகத்தின் கவலையாக காட்டப்படுகிறது.

தனியார் பள்ளியில் குழந்தைக்கு நேர்காணல் நடக்கிறது. தூயதமிழில் அதுவும் 0-வைக் கூட சுழியம் என்கிறது. தலைமையாசிரியர் மிகவும் மகிழ்கிறார், சிரிக்கிறார். நாமும் சிரிக்கதான் வேண்டும் எந்தப்பார்ப்பன குழந்தை தூய தமிழில் பேசுகிறது. அதை சுழியம் எனப்பேச வைத்தாரே கருஞ்சட்டை சீமான் அதற்காக. தலைமையாசிரியரோ 3 டோனேசன் சீட் உள்ளது என்றும் விலை 35,000 ரூபாய் என கடையை விரிக்கிறார், தன்னிடம் பணம் இல்லாததால் கல்வி வியாபாரம் ஆகிவிட்டதென புலம்புகிறான். இந்தப்பார்ப்பானுக்கு கல்வியின் விலை 35,000 என்பதுதான் அதிகமாகப்படுகிறதே ஒழிய கல்வியும் சந்தைப்பொருளாகிவிட்டது குறித்து கவலை இல்லை. அந்தப்பொருளை நம்மால் விலை கொடுத்து வாங்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தான் எழுகிறது.

தன்னுடைய பெண்ணின் வாழ்க்கையில் கான்வெண்ட்லிருந்து கார்ப்ரேசன் பள்ளிக்கு மாற்றலாகப் போகிறது என மனைவியோடு ஒப்பாரி வைக்கிறான். (வழிமுறைதான் வேறு கோபமாக). அன்றிறவு நடக்கும் சண்டையில் மனைவி "திருட்டு போயிடுச்சு திருட்டு போயிடுச்சுன்னு சொல்றது சாதாரண விஷயம் அவனை ஓடிப்போய் பிடிக்கிறவன் தான் ஆம்பளை" என்கிறாள். இங்கே புத்தருக்கு போதிமரம் போல அவளின் வார்த்தை முக்தியை தருகிறது. தன் ஆணுறிப்பில் சுரக்கும் விந்தணுக்களின் மீது சந்தேகம் கொண்டுவிட்டாளோ எனற எண்ணம் எழ தன் ஆணுறுப்பிலிருந்து மன்னிக்க வேண்டும் மனைவியின் கேள்வியிலிருந்து சமூகத்தை பார்க்கிறான் ஸ்ரீதர் வாசுதேவன். இதுவரை கோபத்தை கேள்வியாக மட்டுமே வெளிப்படுத்தியவனால் இனியும் அப்படி இருக்க முடியாது. ஏனெனில் தங்கை கற்பழிப்பு, தாய்கொலை, மனைவியின் கள்ளக்காதல் போல ஆண்மை குறித்த சந்தேகமும் சமூக சிந்தனையாக பார்க்கப்படுகிறது. (தனக்கு உதவி செய்யாததிலிருந்து பார்ப்பனின் கொடுங்கோன்மையைக் கண்ட பரதேசி பாரதியைப் போல)

எப்படி மலையாளிக்கு document இல்லாமல் loan sanction செய்ய முடிந்தது என மேலாளிரிடம் உறுமுகிறான். அவனை சமாதானப்படுத்த நண்பன் குளிர்பானக் கடைக்கு அழைத்து வருகிறான், கூலிங்கிற்காக ஒரு ரூபாய் அதிகமாக coca-cola விற்கும் கடைவியாபாரி மீது கோபம் கொள்கிறான். "நான் ஏன் அமைதியாக இருக்கனும், எதுக்கு திருட்டுதம்? நியாயமான வியாபாரின்னா 2 ரூபாய் திருப்பிக்கொடு, எல்லாரும் அமைதியா இருந்தா நானும் அமைதியா இருக்கனுமா" என்கிறான். மறுக்கும் வியாபாரியின் கடையை அடித்து நொறுக்குகிறான் கிரிக்கெட் மட்டையால் (வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாம்!" பிறகு என்ன வேண்டும் என கடைக்காரன் கேட்க "2 ரூபாய் கொடு" என்கிறான் வாசுதேவன். முகமோ க்ளோசப்பில் பார்ப்பன அரங்கமே அதிர்கிறது "இவா நம்மாளுதான்" என மெச்சுகிறது.

பிளச்சிமடா உள்பட தான் கால்பதித்த இடத்திலெல்லாம் நிலத்தடி நீரை சுரண்டி கொழுக்கும் "Coca-cola, Pepsi" யின் மீது வராத கோபம், பூச்சிகொல்லியின் அளவை பாட்டிலின் மீது குறிக்க முடியாது ஆணவமாய் நீதிமன்றத்தில் அறிவித்த பன்னாட்டு நிறுவனத்தின் மீது வராத கோபம், மற்றொரு பெண்னை joint account-ல் போட்ட பொறுக்கி நண்பனின் மீது வராத கோபம், அடிக்கடி மின்கட்டணத்தை ஏற்றும் அரசாங்கத்தின் மீது வராத கோபம், ரிலையன்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்பட்ட நேர்மையாக தொழில் நடத்தும் சிறு வியாபாரிகள் மீது வருகிறது.

நாட்டில் நடக்காததையா வாசுதேவன் சொன்னான் என சீமான் சப்பைக்கட்டு கட்டலாம். இதைச் சொன்ன வாசுதேவனால் திண்ணியத்தின் தீண்டாமையையோ, சங்கராச்சாரியாரின் விபச்சாரத்தையோ, ஏகாதிபத்தியத்தின் மறுகாலனியாதிக்க சுரண்டலையோ ஏன் சொல்ல முடியவில்லை. சொல்லமுடியவில்லை என்பதல்ல காரணம் வாசுதேவன் என்ற பெயரில் மறைந்திருக்கும் பார்ப்பன பரதேசி சொல்லமாட்டான் என்பதுதான் உண்மை.

எவனோ ஒருவன் உங்களில் ஒருவன் என சொல்கிறார்கள். யதார்த்தமாக நம்மளில் ஒருவனாக இருந்தால், எப்படியும் எமது தோழர்கள் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் விற்பனை செய்வதை பார்க்காமல் கேட்காமல் இருந்திருக்க முடியாது. அப்போது இன்றைய பிரச்சனைகளுக்கு காரணம் மறுகாலனியாக்கமும், பார்ப்பனீய பயங்கரவாதமும் தான் அடிப்படை என தெரிந்து இருக்கும். மற்றபடி இந்த எவனோ ஒருவன் தோழர்களை சந்தித்திருந்தால் உடலில் புண் ஏற்படாமல் போயிருக்க முடியாது என்பதே உண்மை. மீண்டும் வசனத்திற்குள் நுழைவோம்.

கையில் மட்டையோடு திரியும் வாசுதேவன் No parking யில் உள்ள வண்டியை அடித்து நொறுக்குகிறான். மருத்துவமனை அருகில் தள்ளு வண்டி கடையைப் பார்க்கிறான், முட்டை புரோட்டாவுக்காக அலையும் காவலனைப் பார்த்து கேள்வி கேட்கிறான். "பாருங்க சார் ஹாஸ்பிட்டல் பக்கத்தில் முட்டை கிட்டைன்னு கலீச்சா இருக்கு தப்பு நடக்கிறது நீங்க தடுக்க முடியாதா; கேவலம் 5 ரூ புரோட்டாவுக்கு நாக்கை தொங்க போடாதீங்கோ" இங்கே வாசுதேனுக்கு கோபம் வரவில்லை ஆதங்கம் வரவில்லை. சிறு வியாபாரியின் கடையை நொறுக்கிய அந்த மட்டை காவலனை பார்த்து ஏன் உயரவில்லை. என்ன ஸ்ரீதர் வாசுதேவன் உன் கோபம் அதிகாரவர்க்கம் மீது மட்டும் எழாதா? உழைக்கும் மக்கள் உண்ணும் உணவை கலீச்சு ஆக பார்ப்பனன் வாசுதேவன் நினைக்கலாம். சீமானே நீ எப்படி நினைத்தீர்கள். எப்போது காஞ்சி சென்று பார்பனனின் காலைக்கழுவி குடித்தீர்கள்.

சிறைக்குள்ளிருக்கும் போது கூட தூங்கும் காவலர் மீது ஆதங்கம் வருகிறது (கோபம் வரவில்லை) "ஏன் தூக்குகிறீர்கள்" கேள்வி கேட்கிறான். வெளியே வருகிறான். மீண்டும் குடிதண்ணீர் விடும் பணியாள் 100 ரூ லஞ்சம் கேட்கும் போது அடித்து நொறுக்குகிறான். இதற்கு யார் காரணம் என யோசித்து ஏரியா கவுன்சிலரை கொலை செய்ய முயன்று காயம் ஏற்படுத்துகிறான். வெக்கமாயில்ல என்றபடியே கத்தியில் குத்துகிறான். இதற்கிடையில் ஏரியா இன்ஸ்பென்டர் வெற்றிமாறன் (சீமான்) வருகிறார். சப்- இன்ஸ்பெக்டரிடம் நடந்த சம்பவங்களை விசாரிக்கிறார். "ஏன்யா அந்தாள விட்டிங்க. 'ஸ்ரீதர் வாசுதேவன்'ங்கற பேரில் எத்தனை கேஸ் ரிஜிஸ்டர் ஆயிருக்கு. ஒயிட் காலர் ஆளுங்க தப்பு செய்ய ஆரம்பித்துவிட்டால் உலகமேதிரும்பி பார்க்கும்" என்கிறார். வாசுதேவன் Junior சங்கராச்சாரி எனில் வெற்றிமாறன் சீனியர் சங்கராச்சாரி தத்துவம் : நடுத்தர வர்க்கம்,பணக்கார வர்க்கம் சீக்கிரம் போராடாது களத்திலிறங்கினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். ( உழைக்கும் மக்கள் போராட்டத்தை கேவலப்படுத்து திமிர்)

வாசுதேவன் கஞ்சா விற்கும் குடிசைகளைப் பார்க்கிறான் ; சுமோவில் வரும் இளைஞன் போதையடிப்பதை பார்த்து கோபம் கொள்கிறான். குடிசைகளுக்கு தீவைத்து போதைப்பொருள் விற்போரிடமிருந்து (குடிசையில் வசிப்போரிடமிருந்து) இளைஞர்களை ( சுமோ வைத்திருத்தல் அவசியம்) காப்பாற்றுகிறான். இந்நிலையில் சீனியர் சங்கராச்சாரி (வெற்றிமாறன்) சக போலீசிடன் சொல்கிறான். "அவன் என்ன தப்பு செய்தான்; யார் குற்றவாளி; குற்றம் எந்த சூழலில் எதற்கு செய்யப்பட்டது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். தோட்டாக்களால் தீர்வு காணமுடியாது" நான் அவனுக்கு மாலையே போடுவேன் என வாசுதேவன் மீது காதல் கொள்கிறார்.

நடுரோட்டில் புலம்புகிறான் வாசுதேவன் - எல்லா பிரச்சினைக்கும் மனிதனின் பேராசைதான் காரணம், சம்பளம் ஏற்றுவதற்காக ஸ்டிரைக், போராட்டமும், லாபத்தை ஏற்ற திருட்டுத்தனமும் செய்கிறார்கள் என அரிய உண்மையை கண்டறிகிறான். விவசாயம் அழிந்ததற்கோ, தொழிலாளி தெருவில் வீசப்படுவதற்கோ, நீர், காற்று, உணவு, மருத்துவம், கல்வி என அனைத்தும் பறிக்கப்பட்டதற்கோ காரணம் மறுகாலனியாதிக்கமோ, உலகவங்கியோ இல்லையாம். மனிதனின் பேராசை தான் காரணமாம். முதலாளியின் திருட்டுத்தனமும் தொழிலாளியின் போராட்டமும் சீமானின் தராசில் சமபங்கு வகிக்கிறதாம். தன் குழந்தைக்கு தூய தமிழை கற்றுக் கொடுத்த வாசுதேவன் கடவுளிடம் மூச்சுவிடாமல் ஆங்கிலத்தில் முறையிடுகிறான். மறுகாலனியாக்கச் சூழலில் தேவபாசை சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலமாக மாறி விட்டதோ என்னமோ? அழகான பேமிலியை சாக்கடையில் தள்ளி விட்டார்கள் சனியன் என அலுத்துக் கொள்கிறான். எதுவும் எனக்கு பிடிக்கவில்லை எல்லாம் கடவுள் விளையாட்டு என்கிறான்.

அவ்வப்போது இடையிடையே சீனியர் வெற்றிமாறன் போலீசின் வேதனையை உதிர்க்கிறார். "நிம்மதியா வாழ எவ்வளவு காசு தேவைப்படும், chennai போலீசுக்கும் எவ்வளவு மன அழுத்தம், மன ரீதியான பிரச்சினைகள் தெரியுமா? கொடுக்கிற சம்பளத்தை வைச்சு குடும்பம் நடத்த முடியுமா ? லஞ்சம் வாங்கும் நிலைக்கு இச்சமூகம் காவலர் களை தள்ளிவிட்டதாம்" சீமான் கவலைப்படுகிறார்.

மீண்டும் இருமல் சிறுவனுக்கு பாதிப்பு ஏற்பட அவனைத்தூக்கிக்கொண்டு மருத்துவமனை செல்கிறான் அங்கு பார்ப்பன கிழதம்பதிகளுக்காக மருத்தவனின் தலையில் துப்பாக்கி வைக்கிறான். வன்முறையால் எதற்கும் தீர்வுகாண முடியாது என்ற பார்ப்பன கிழவனின் தத்துவம் வாசுதேவனின் ஞானத்தேடலை முடித்து வைக்கிறது.

வாசுதேவனின் ஞானத்தேடல் பெரிய பிரச்சினையாகி விட அவனை என்கவுண்ட்-ல் முடிக்கும் பொறுப்பு வெற்றி மாறனிடம் ஒப்படைக்கப்படுகின்றது. "சட்டத்தை காப்பாற்ற சென்ற ஒருவனை சட்டத்தின் பேரைச்சொல்லி கொல்லவேண்டி உள்ளதே? உண்மை எப்போதும் சுடும் அதற்கு முன்னரே உண்மையை சுட வேண்டி உள்ளது" கேள்விகளை மனத்தில் புதைத்துக்கொண்டு வாசுதேவனிடம் சொல்கிறார்." Mr.ஸ்ரீதர் வாசுதேவன் நீங்கள் காவல் நிலையத்துக்கு வரவேண்டும்". ஆனால் அவன் மறுக்கவே "மன்னிக்கனும் u are under arrest" என்கிறான். வாசுதேவனோ "என் பொண்ணுக்கு உடம்பு சரியில்லை நான் வரேன்னுதான் சொல்லறேன்" என சொல்ல; வெற்றிமாறன் "நான் என்ன கேணப்பயல" என கத்த; வாசுதேவன் "புரிஞ்சுக்கோங்க ! புரிஞ்சுக்கோங்க ! வீட்டுக்கு போயிட்டு வரேன் என்றபடி துப்பாக்கியை தூக்கி; வெற்றிமாறனால் சுடப்பட்டு சாகிறான்.

ஸ்ரீதர் வாசுதேவனை பற்றி அவனது பக்கத்து வீட்டு பார்ப்பன குடுமிகளிடம் போலீசார் விசாரிக்கும்போது அவர்கள், "வாசுதேவன் அப்பா ஷாகாவில் இருந்தவர், பெரிய தேசப்பற்றாளர்" என்கின்றனர். 'ஷாகா' என்ற ஆர்.எஸ்.எஸ்-யின் இந்து பயங்கரவாதத்திற்கான ஆயுதப்பயிற்சியினை தேசப்பற்றாக சித்தரிக்கும் இந்தவொரு வசனமே சீமானின் யோக்கியதையினை தோலுரித்து காட்டுகிறது.

சட்டத்திற்குட்பட்டு இன்ஸ்பெக்டரின் அனுமதியோடு சன்னலருகில் உட்கார்ந்து உயிரை விடுகிறான் வாசுதேவன். வெற்றிமாறனின் மனைவி "கொன்னுட்டீங்களா" எனக்கேட்க அவனோ "கொல்லவேண்டிய கட்டாயம், வாசுதேவனும், அரசும் சோகமான முடிவை தேடிக்கொண்டார்கள். தலைகுனிந்து நடக்கும் மக்களில் எவனோ ஒருவன் நமக்காக போராடினான்னு இல்லாம உணர்ச்சிகளற்ற ஜடமாய், சூடு சொரனையில்லாமல் மக்கள் போகிறார்கள்" என முடிக்கிறார்.

மக்களைவிட்டு அந்நியப்பட்டு நிற்கும் வாசுதேவன்களை கொண்டு உழைக்கும் மக்க்ள் மீது பழிபோடுகிறார் சீமான்.இப்படத்தில் எவனோ ஒருவன் மாதவன் அல்ல சீமான் தான் எனபது வெள்ளிடைமலை. மக்களிடமிருந்து சிந்திக்காத இப்படிப்பட்ட எவனோ ஒருவன்களால் மக்கள் விடுதலையினை சாதிக்க முடியாது. மக்களிடமிருந்து கற்று மக்களை அணிதிரட்டி மக்கள் பாதையில் போராடும் ஒருவனால் தான் விடுதலைக்கு துணை நிற்க முடியும், சாதிக்க முடியும். அதற்கு முன் தேவையாக இதுபோன்ற பார்ப்பனீயத்தின் எச்சங்களான எவனோ ஒருவன்கள் ஒழிக்கப்படவேண்டியது அவசியம்.